Skip to main content

Posts

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ / நான் / ஞானம் / குற்றம் / பசி என   நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல   பிடிக்க முடியாத காற்றும் நான் எனப்படுவது கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில் முப்பதாண்டுகளாக அலைந்து திரியும்   கூடு திரும்பாப் பறவையும் ஞானமென்பது   குற்றம் வழிந்தோடும் மற்றக் கண்ணும் குற்றத்தின் காயமே புதிய ஞானமும்   பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின் இசைக் குறிப்பும் என்பதாக பழஞ் சொற்களின் பரவசத்தில்   தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி ஆர்ப்பரிக்கிறது கவிதை
Recent posts

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின் மடிப்புகளுக்குள்   வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன ? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன ? வேரெனப் படர்ந்திருக்கும் இந்தப் பேரழகி இரவின்   சுருள்முடிக் கற்றைகளில் கிறங்கி   சொற்களைத் தவறவிடும் ஏதிலிக்கு கவிதையன்றி போக்கிடமேது ? கேள்விகள் செய்தே தீர்ந்து போன   சொற்களிருந்த இடைவெளிக்குள்ளிருந்து   படபடக்கும் நின் காதல் வெறுங் கவிதையின் மீது   கடல் நீல நிறமெனப்   படிந்து விடுகிறது .  கவிதையே என் திரை , கிரீடமும் அதுவே   என வழக்கம் போல தன் பிரத்தியேக வாத்தியம் கொண்டு இன்னொரு நள்ளிரவின் மீது   பாடலை இசைக்கத் தொடங்குகிறது நான்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது   உண்மையை  மறைப்பது ,  பின்   அதில்   சுகிப்பது . இரவின்   முடிவில்   ஒரு   பூ   வளையமெனத்   தன்னை  சுற்றியிருக்கச்   செய்து சத்தமாகப்   பாட்டிசைக்கிறது   நான் தூய   அர்த்தமாகிய   யசோதரா என்   இசையில்   மெல்லக்   கரைந்து   காற்ற

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்டியிருக்கும் கால்மயிர்களுக்குள்   திவலை திவலையென அப்பியிருக்கும்   ஒவ்வொரு உ

#joy_is_mingling_HU

   we sowed the remained  words  as flaky mountains then  saliva of words  laid on a blank paper  flowed into brook mountains were wet as pure poems never decayed, as a green portrayed on leaves, as a warmth of inner-saffron  me jabbers the journey within   #joy_is_mingling_HU

Story of a Gloomy Dusk

© Fatheek Aboobucker The claypot filled of me as words unadorned, Paints the fragrance of this very dusk  on the inner wall An alleyway furcated of unknown Enlarged as adjoin-able in me the self, Writes the note of this very dusk  "Path is the destiny" Then  through the scars of decayed window  Bursts as light The great word  Imperishably coloured of thee