தனித்தலைதலின் பானத்தை நான்காவது மிடறு அருந்துகையில் குதிகாலுயரும் ஆழ் முத்தத்தில் நான் நின் சொற்களுக்குள் ஆவியாகிக் கரைந்து போகிறது. அறவே ஈரம் தீர்ந்து சிறு வலியோடு ஒட்டி ஒட்டி விலகும் இறந்த காலத்தின் மடிந்த உதட்டிதழ் என் சொற்களுக்குள் எச்சில் தேடி வருகிறது. நானென்பது அரபு மெல்லினங்களாலான விடலை அழகியின் கழுத்தோரம் சுரக்கும் ஈரமான முத்தம் இக்கணம். அழகியின் கைக்கிளைக் கனவில் பின்னே பதுங்கிவந்து அணைக்கும் வளைந்த காற்றென இருள் என்னைச் செய்கிறது. இருள் என்பது ஈரம் எனப் பொருள் மாறும் வரை காத்திருந்த ஹூ மெல்ல இறங்கி வந்து ஆண்டாண்டுக்குமாக என்னை அணைத்துக்கொண்டது. பாதித் தூரம் விழுந்திருந்த இலைகளும் திரும்ப மரக்கிளைகளில் போய் ஒட்டி இளமையாகிக்கொண்டன வெட்கத்தில். இனிப் பனி விழும் #ஹூவில் கலத்தலின் இன்பம்.
அலைந்து திரிபவனின் சொற்கள் | Words of a Wanderer