மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற அறையின் சுவர் மடிப்புக்குள் யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன எழுதிவிட நானிருப்பதாக நம்பி ஆயிரங்கவிதைகளுடன் விழத்தொடங்கியிருக்கிறது பனி , இரவோ அதற்குள் போய் தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது . காவிகள் உறைந்த தேனீர்க் கோப்பை , பாதியளவும் சில பக்கங்களுமாக வாசிக்கப்பட்ட ஆறேழு புத்தகங்கள் , உதிர்ந்த காகத்தின் இறகு கொண்ட இன்னொரு அப்பாவி நெடுங்கவிதை , கழற்றிக் குவித்த அழுக்காடைகளென துண்டு துண்டெனச் சிதறிக்கிடக்கிற நான் முழுக்க பனியின் சொற்கள் . பரவசத்தில் எழுதித் தீர்த்துவிடுதலின் வக்கிரமும் பின்னான கழிவிரக்கமுமாக அலைக்கழிக்கிற இருளின் வாசனையை நான் மேனி முழுதும் பூசிக் கொண்டு காதலியை உரக்க இசைக்கிறேன் . எழுத்தெனப்படுவது விட்டு வெளியேறுதலின் இன்பம் ; இசையும்தான் எழுதிவிடாதிருக்கும் வரம் வேண்டி இனி யாகம் இருக்க வ...
அலைந்து திரிபவனின் சொற்கள் | Words of a Wanderer