Skip to main content

Posts

Showing posts from July, 2016

13072016 - 01:00

முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள் சிறகடித்து வந்தமரும் வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது. வழமை போலவே காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது இரவும் காதலும் காடேகுதலும் மலையேறுதலுமான வினைகள் கொண்டு தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்; நானெனப்படுவது; நீ ஒளியைப் பிடுங்கிச் சென்ற
 அதே நள்ளிரவின் காட்டுக்குள் அலையும் கைவிடப்பட்ட பூனை இக்கணம் அல்லது
 தன்னை விடுவித்து மீட்டெடுக்கவென்று அனுப்பப்பட்ட எழுத்தெனும் மீட்பரையும் அவர்தன் சிலுவையையும் தானே சுமந்தபடி நடந்து நின் மலையேறும் முனி என்னுடைய தேவனே 
நீரே எனக்கு ஒளியாயிரும்

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால் குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன உலர்ந்த அதிகாலையொன்றில் என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய் குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும் நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும் கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன. அதுவோ நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள் அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ; முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள் எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான் ஆழமான நதியொன்றின் அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும் ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த தீராத இரவின் காதலன் யசோதரா! காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி அந்திப் பொழுதுகளில் உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறது