Skip to main content

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால்
குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன
உலர்ந்த அதிகாலையொன்றில்
என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை
மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை
காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்

குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும்
நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும்
கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன.

அதுவோ
நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது

நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள்
அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ;
முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள்

எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான்

ஆழமான நதியொன்றின்
அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும்
ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த
தீராத இரவின் காதலன்

யசோதரா!
காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு
என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு

உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி
அந்திப் பொழுதுகளில்
உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறது



Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

#joy_is_mingling_HU

   we sowed the remained  words  as flaky mountains then  saliva of words  laid on a blank paper  flowed into brook mountains were wet as pure poems never decayed, as a green portrayed on leaves, as a warmth of inner-saffron  me jabbers the journey within   #joy_is_mingling_HU

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்...