பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம், தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது. முத்தங்கள் உறைந்தே சுருங்கிய கீழுதடு, குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட சூர்ப்பனகாக் கூந்தல், துப்பலால் சரிசெய்யப்பார்த்தும் முடியாது போன கண்ணீர்த் திவலைகள், இன்னமும் தொக்கி நிற்கும் ஆரத் தழுவுகை என அத்தனையையும் எழுதி முடித்து மடித்துப் பத்திரப்படுத்தப்பட்ட இந்த நகரத்து நள்ளிரவின் ஆன்மா இன்னமும் இருள் விலகாத தன் இளங்கவிதைக்கு பயணம் எனப் பெயரிடுகின்றது. அப்போது கவிதைச் சொற்களுக்குள் பிரித்தெடுக்க இயலாத வாசனைபோல பரவியிருக்கிறது விரகம். அர்த்தமோ செய்வதறியாது கண்கள் மூடிக்கொண்ட, கைகள் இறுகப் பொத்திய பிஞ்சு முத்தங்களில் தீராத போதையுறுகிறது. தனக்குள் ஒரு புத்தகம் வாசிக்கும் ஓவியமெனக் கிடையாகப் படுத்திருந்த காதலி நினைவுகளாலான ஒரு மரங்கொத்தியென அதே பனி புகார்ந்த இரவின் மறு பாதியில் உருமாறியிருந்ததன் பாரத்தை கவிதை சுமக்க முடியாது திணறுகிறது. இப்படித்தான் பிரிவின் துயர் சொற்கள் அழுத்தும் ஒரு கொடுங்கவிதையின் கனம் என் பனி வார...
அலைந்து திரிபவனின் சொற்கள் | Words of a Wanderer