Skip to main content

கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது


பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம்,
தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து
என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது.

முத்தங்கள் உறைந்தே சுருங்கிய கீழுதடு, குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட சூர்ப்பனகாக் கூந்தல், துப்பலால் சரிசெய்யப்பார்த்தும் முடியாது போன கண்ணீர்த் திவலைகள்,
இன்னமும் தொக்கி நிற்கும் ஆரத் தழுவுகை என அத்தனையையும் எழுதி முடித்து
மடித்துப் பத்திரப்படுத்தப்பட்ட இந்த நகரத்து நள்ளிரவின் ஆன்மா
இன்னமும் இருள் விலகாத தன் இளங்கவிதைக்கு பயணம் எனப் பெயரிடுகின்றது.

அப்போது கவிதைச் சொற்களுக்குள்
பிரித்தெடுக்க இயலாத வாசனைபோல பரவியிருக்கிறது விரகம்.

அர்த்தமோ
செய்வதறியாது கண்கள் மூடிக்கொண்ட,
கைகள் இறுகப் பொத்திய பிஞ்சு முத்தங்களில் தீராத போதையுறுகிறது.

தனக்குள் ஒரு புத்தகம் வாசிக்கும் ஓவியமெனக் கிடையாகப் படுத்திருந்த காதலி
நினைவுகளாலான ஒரு மரங்கொத்தியென அதே பனி புகார்ந்த இரவின் மறு பாதியில் உருமாறியிருந்ததன் பாரத்தை கவிதை சுமக்க முடியாது திணறுகிறது.

இப்படித்தான்
பிரிவின் துயர் சொற்கள் அழுத்தும் ஒரு கொடுங்கவிதையின் கனம்
என் பனி வார்த்தைகளத்தனையையும் திருடிச் சென்ற
ஒரு கதைசொல்லியின் மாயத்துக்குள் கரைந்த கதை குறித்துவைக்கப்பட்டிருந்தது.

கவிதை தன் முடிவில் *But still we danced, to slow music. Because I'd seen others doing it. I put my arms around her, and then I pulled her closer as if by instinct, and noticed that her hair smelled of almonds. I loved the little movements of her lips when she ate how she looked like a squirrel when she was worried என்பதாக
விடலைக் காதலில் புகார்ந்திருந்த பனி மெல்ல விலகத்தொடங்குகிறதை அறிவிக்கிறது.

திரும்பவும்,
நினைவுகளுக்குள் ஓவியமென நடமாடும் நான் முழுக்க
பெருந்துகள்களாக விழுந்து உறைந்து கிடக்கிறது அதே பனி

*Orhan Pamuk, Istanbul-296

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

#joy_is_mingling_HU

   we sowed the remained  words  as flaky mountains then  saliva of words  laid on a blank paper  flowed into brook mountains were wet as pure poems never decayed, as a green portrayed on leaves, as a warmth of inner-saffron  me jabbers the journey within   #joy_is_mingling_HU