என்னிலிருந்து விழும் சொற்கள் உதிர்ந்தேதான் விழுகின்றன என்பதாகவே அதிகம் ஏமாற்றப்படுகிறேன்.
நானென்பதோ
அதிலிருந்து நிர்வாணம் கிடைக்கப்போகிறதென்ற பெருங்கனவில்
அல்லது
அர்த்தமென்பது வெளிப்படப் போவதான பேராவலில் ஏமாந்தபடியே
திரும்பத் திரும்ப சொற்களை
அணிந்து கொண்டும் உடுத்திக் கொண்டும் இருக்கிறது.
அதே கனவில் ஆசிரியரென எழுதப்பட்ட சொற்களை உடுத்தியவர்கள் வந்தனர்
1/இறுக மூடியிருக்கும் சொற்களிலிருந்து அர்த்தம் புடைத்திருப்பதாக
நம்பவைக்கத் தொடங்கினர்
2/அர்த்தம் என்பதோ விரைத்தாலும் புடைத்து வெளித்தள்ளாத மானமுள்ள அங்கமெனக் கற்பித்தனர்
3/ இறுகிய சொற்கள் கரையும் நதி போன்றவை என
பொய்யையே காலம் என்று நம்பப் பணித்தனர்
4/ அர்த்தங்கள் மீது துணுக்குறுவதே 'முழுமையாக விடுதலை பெறுதல்' எனப் பெயரிட்டனர்
அர்த்தத்துக்கான கொடும் பசியில்
நானோ அறியாது சொற்களைத் தின்னத் தொடங்கினேன்.
வயிறு நிரம்பிப் புடைத்த போது
இன்னமும் தீண்டப்படாத அர்த்தம் என் முன்னால் காலம் என நின்றது.
கோபத்தில் கழுத்தில் மிதிபட்ட ஆசிரியனின் வெளித்தள்ளிய நாக்கோடு சேர்த்து
பதினைந்து சொற்கள் தரையில் கிடந்தன (என்னையும் சேர்த்து)
(பி.கு: சிலவேளை இதை எழுதாமல் நான் எப்போதோ தூங்கியிருக்கலாம்
என வேறு ஏழு சொற்களும் ஒரு மாத்திரையும் கிடந்ததாக ஞாபகம்)

Comments