"...கரடு முரடான சொற்களை அவிழ்த்தெறிந்த அர்த்தங்கள்
என்னை அணிந்து கொள்கின்றன..."
"..மோகித்த தம் இதழ்களால்
அந்தக் காயங்களின் தளும்புகள் மீது தடாவித் தருகின்றன..."
"..தூய அர்த்தங்களின் கிறக்கத்தால்
இப் பின்னிரவில் நான் கிட்டார் இசைக்கிறது"
".. கவர்ச்சியான சொற்களை அணியாத வெறும் இரவு
என்னை மீண்டும் மீண்டும் சபிக்கிறது?"
02. வடிவத்தை மறந்து பாதி வழியில் இந்தக் கவிதையைக் கைவிடுகிறேன் :O
சில வேளை அது எழுதத்துணியாத இந்த இரவின் சொற்களைத்
திணித்து அடைத்ததினால் இருக்கலாம்
அதை விட எனக்கோ
அவற்றைக் கற்களாக்கி என்மீதே வீசுவதால்தான்
இன்னொரு என்னை உடைக்க முடியும் என்ற சுய நலம்.
எழுதத்துணியாத வார்த்தைகள் ஒரே வீச்சில் என்னை நொருக்கப் போதுமானவையும் கூட.
இப்படித்தான் நானென்பது சொற்களை அவிழ்த்தெறியும் இரவுகளில்
நின் கவிதைகளின் அர்த்தம்
புதிய என்னை எடுத்து அணிந்து கொள்கிறது.
Comments