Sulpture of Auguste Rodin - 1889 |
விட்டு விடுதலையாக முடியாதெனச்
சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும்
ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம்.
காதலி உண்டு முடித்தவுடன்
'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள்
'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள்
வசந்த காலத்தின் சிறு பூக்களாலான கர்வத்தின் கோர்வையொன்று
அவள் கழுத்தில் தானாகத் தோன்றியது.
கனிகளின் போதை அவள் கண்முழுக்க நிரம்பியிருக்கவும்;
காதலி ஏளனமாகப் பார்த்திருக்கவுமாக
நானோ 'வாழ்வு' என உருமாறிப் போனேன்.
நீ கனிகளின் கிறக்கத்தில் உளறுகிறாய் யசோதரா!!!
நீ என்பது பருகும்போது கீழே சொட்டிய மதுவின் ஒரு துளிதான்;
நானெனப்படுவதோ ஹூவிலிருந்து பிரிந்த முத்தம்.
Comments