வெள்ளை முத்தங்களென எறும்பூரும்
இந்த நள்ளிரவின் பெயரென்ன?
உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி
கவிதைக்குள் உறைந்து போன
விரகத்தின் சுவை என்ன?
வேரெனப் படர்ந்திருக்கும் இந்தப் பேரழகி இரவின்
சுருள்முடிக் கற்றைகளில் கிறங்கி
சொற்களைத் தவறவிடும் ஏதிலிக்கு
கவிதையன்றி போக்கிடமேது?
கேள்விகள் செய்தே தீர்ந்து போன
சொற்களிருந்த இடைவெளிக்குள்ளிருந்து
படபடக்கும் நின் காதல்
வெறுங் கவிதையின் மீது
கடல் நீல நிறமெனப்
கடல் நீல நிறமெனப்
படிந்து விடுகிறது.
கவிதையே என் திரை, கிரீடமும் அதுவே
என
வழக்கம் போல தன் பிரத்தியேக வாத்தியம் கொண்டு
இன்னொரு நள்ளிரவின் மீது
பாடலை இசைக்கத் தொடங்குகிறது நான்
Comments