Skip to main content

Posts

13072016 - 01:00

முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள் சிறகடித்து வந்தமரும் வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது. வழமை போலவே காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது இரவும் காதலும் காடேகுதலும் மலையேறுதலுமான வினைகள் கொண்டு தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்; நானெனப்படுவது; நீ ஒளியைப் பிடுங்கிச் சென்ற
 அதே நள்ளிரவின் காட்டுக்குள் அலையும் கைவிடப்பட்ட பூனை இக்கணம் அல்லது
 தன்னை விடுவித்து மீட்டெடுக்கவென்று அனுப்பப்பட்ட எழுத்தெனும் மீட்பரையும் அவர்தன் சிலுவையையும் தானே சுமந்தபடி நடந்து நின் மலையேறும் முனி என்னுடைய தேவனே 
நீரே எனக்கு ஒளியாயிரும்

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால் குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன உலர்ந்த அதிகாலையொன்றில் என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய் குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும் நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும் கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன. அதுவோ நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள் அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ; முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள் எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான் ஆழமான நதியொன்றின் அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும் ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த தீராத இரவின் காதலன் யசோதரா! காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி அந்திப் பொழுதுகளில் உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறது

முத்தம்

Sulpture of Auguste Rodin - 1889 விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம். காதலி உண்டு முடித்தவுடன் 'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள் வசந்த காலத்தின் சிறு பூக்களாலான கர்வத்தின் கோர்வையொன்று அவள் கழுத்தில் தானாகத் தோன்றியது. கனிகளின் போதை அவள் கண்முழுக்க நிரம்பியிருக்கவும்; காதலி ஏளனமாகப் பார்த்திருக்கவுமாக நானோ 'வாழ்வு' என உருமாறிப் போனேன். நீ கனிகளின் கிறக்கத்தில் உளறுகிறாய் யசோதரா!!! நீ என்பது  பருகும்போது கீழே சொட்டிய மதுவின் ஒரு துளிதான்; நானெனப்படுவதோ ஹூவிலிருந்து பிரிந்த முத்தம்.

பூகோவ்ஸ்கி

01. காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில் சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான். ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது. பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை சுருட்டிக் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான். கிரீச் கிரீச் சென்று கேட்கும் கதிரைச் சத்தத்தில் மடியில் நிர்வாணமான காதலியைத் தடவிக் கொடுத்தபடி அவன் திரும்பவும் அவளில் இசையைச் செய்யத்தொடங்கினான். "இன்னொன்றை சுருட்டித் தரட்டுமா" என்று கேட்டேன் "ஞானம் வெறும் புகைதான்; பறந்து போய்விடும், இவளோ மது சுரக்கும் தேன் வதை" என்று கிறங்கிய கண்களுடன் அவளை அணைத்தபடி உளறினான். அப்போது ஞானத்தின் புகை இரவு முழுக்கப் பரவியது. 02. காலையில் முகத் தோல் சுருங்கி, கிழவனாகி, தாடி முழுக்க நரைத்து நான் இறந்து போயிருந்தேன் என்னுடைய மரண ஊர்வலத்துக்கு கழுத்துப்பட்டி அணிந்து அதே காதலியுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறான் பூகோவ்ஸ்கி. அவள் அப்போது ஆடை அணிந்திருந்தாள். பதறியடித்தபட...

Me or the light from Silhouette

Unfolding the last few lines of solitary, written up on this midnight; words of darkness,  horrendous than me  were sprinkled ME;  a silhouette of dark,   a  light irradiates from solitude, or a lust drawn depiction of  yasodharas moist fingers, on lonely nights of Buddha. 

Night is Playing

Night is playing,  Collaging the papers of loneliness torn into pieces on all over my portrait. The night is playing ME is the face of decay; decay is disbanded tresses of the midnight for now (Night does nothing but decaying the ME) )

இரவாகுதல்

என்னை இன்னொன்றாக்கும் வித்தையை இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும், ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள் கிடந்து தவிப்பதுமாக உழலுகிறது நானாகிய பாவம். ஞாபகங்களுக்குள் சிக்கியிருக்கும் மற்றொரு நானை விடுவிப்பதில் தோற்றுப்போனதன் வார்த்தைகளை என் மேல் எழுதிவிட்டு ஓட நினைக்கிறது அது. வலிகளால் நிரப்பப்பட்டு இரவின் மீது உருளும் ஞானத்தின் மட்பாத்திரம் நான், மாத்திரமின்றி ஒளியை மட்டுமே கொண்ட இரவினால் துரோகமிழைக்கப்பட்ட காதலியின் கருவிழியுந்தான். இரவுகளுக்கேயுரிய புதிதான இன்னொன்றாகும் மந்திரம் வசப்படாமை குறித்து நான் உன்னிடமே முறைப்படுகிறேன். நீயே என் இரவுகளை மாறி மாறி வர வைக்கும் காதலி. என்னை இருள்வதும் பின் ஒளிர்வதுமாகிய உன் மந்திரமறிந்த இரவாக்கிவிடு.