Skip to main content

Posts

Showing posts from May, 2016

முத்தம்

Sulpture of Auguste Rodin - 1889 விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம். காதலி உண்டு முடித்தவுடன் 'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள் வசந்த காலத்தின் சிறு பூக்களாலான கர்வத்தின் கோர்வையொன்று அவள் கழுத்தில் தானாகத் தோன்றியது. கனிகளின் போதை அவள் கண்முழுக்க நிரம்பியிருக்கவும்; காதலி ஏளனமாகப் பார்த்திருக்கவுமாக நானோ 'வாழ்வு' என உருமாறிப் போனேன். நீ கனிகளின் கிறக்கத்தில் உளறுகிறாய் யசோதரா!!! நீ என்பது  பருகும்போது கீழே சொட்டிய மதுவின் ஒரு துளிதான்; நானெனப்படுவதோ ஹூவிலிருந்து பிரிந்த முத்தம்.

பூகோவ்ஸ்கி

01. காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில் சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான். ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது. பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை சுருட்டிக் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான். கிரீச் கிரீச் சென்று கேட்கும் கதிரைச் சத்தத்தில் மடியில் நிர்வாணமான காதலியைத் தடவிக் கொடுத்தபடி அவன் திரும்பவும் அவளில் இசையைச் செய்யத்தொடங்கினான். "இன்னொன்றை சுருட்டித் தரட்டுமா" என்று கேட்டேன் "ஞானம் வெறும் புகைதான்; பறந்து போய்விடும், இவளோ மது சுரக்கும் தேன் வதை" என்று கிறங்கிய கண்களுடன் அவளை அணைத்தபடி உளறினான். அப்போது ஞானத்தின் புகை இரவு முழுக்கப் பரவியது. 02. காலையில் முகத் தோல் சுருங்கி, கிழவனாகி, தாடி முழுக்க நரைத்து நான் இறந்து போயிருந்தேன் என்னுடைய மரண ஊர்வலத்துக்கு கழுத்துப்பட்டி அணிந்து அதே காதலியுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறான் பூகோவ்ஸ்கி. அவள் அப்போது ஆடை அணிந்திருந்தாள். பதறியடித்தபட

Me or the light from Silhouette

Unfolding the last few lines of solitary, written up on this midnight; words of darkness,  horrendous than me  were sprinkled ME;  a silhouette of dark,   a  light irradiates from solitude, or a lust drawn depiction of  yasodharas moist fingers, on lonely nights of Buddha.