Skip to main content

Posts

Showing posts from June, 2017

மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும்   இருளைப் புகையச் செய்து   காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன் . படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது . கழற்றியெடுக்கப்பட்ட மற்றொன்றின் முகம்   இனி அணிவிக்கப்படத் தேவையில்லாதது தானென காலக்கோட்டின் மேல் தன் குறிப்பை எழுதிவைத்துவிட்டு மறைகிறது . வலிந்து அணிவிக்கப்பட்ட முகங்களுக்குள்ளிருந்து வீசுவதும்   அதே உஷ்ணமான ஒளிதானென்ற பாடலுடன் எனக்குள்ளிருந்து வெளியேறிய தெருப்பாடகன்   தன் தோற்கருவியைத் தட்டியபடி நடக்கிறான் பசியே அவனின் இசையாயிருக்கிறது அவனின் நீண்ட அங்கியின் மேல்   புழுதிக் கறையெனவும் பசியே படிந்திருக்கிறது இனிப் பசியினதும் புழுதி யின் நிறமே என உச்சஸ்தாயியில் அந்தப் பாடல் முன கியபடி நீள்கிறது அதே முன்னிரவில் பழைய புகைப்படங்களின் இருளுக்குள்ளிருந்து   ஒரு கீற்றெனத் தோன்றி மறைகிறது   என

பசியெனப்படும் பெருஞ்சொல்

01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட  பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி   இந்த நள்ளிரவு   தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது .  நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம் என   தனக்கெனத் தெரிந்தெடுக்கவென பசியின் பரவசம்   எதையுமே   விட்டு சென்றிருக்கவில்லையென ஏங்கி   தன் மேனி முழுக்க சாம்பல் நிறத்தைத் தீட்டிக் கொண்டது இரவு 02. பசியெனப்படும் பெருஞ்சொல்லை   அதே நிறங்களால் மீளவும் தன் மீது எழுதத் துவங்குகிறது நான் அப்போது   புத்தக அடுக்கினுள் புழுதி படிந்திருந்த குட்டிப் புத்தரின் மேல்   பாதி நிலவின் ஒளியெனப் படர்கிறது பசி பழம்புத்தக மடிப்புகளுக்குள் பசி ஒரு   பழுத்த மஞ்சள் நிறத்தின் வாசமென வீசுகிறது கடந்து செல்ல முடியாத கவிதைக்குள்ளோ   பசி தன்னையோர் மறுகாலால் உணரப்பட்ட   இன்னொரு நதியின் கதகதப்பெனக் குறித்து வைக்கிறது பசியெனப்படும் பெருஞ்சொல் தனக்கு இனி ஒ

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது ஆங்காங்கே உதிர்ந்து விழும் பிஞ்சு இறகுகள் முழுக்க கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை. குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன் காதோரம் "மீட்டப்பட்ட யாழின் சந்தம் உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்" என்றபடி கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது. கவிதைக்குள் நுழையவே முடியாது போன இந்தத் தடவை கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து ஓய்வெடுக்கிறது நான்.

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும் தட்டச்சு செய்யப்படாத   விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது . வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு   பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்   இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள் அது என்னைப் பற்றியது சாயமற்ற தன் உதடுவழி   அவள் தன் பாடலை இப்படித் தொடங்கினாள் " ... அவனொரு வெள்ளைக் காகிதம் நானோ மைபூசப்பட்ட ஒளி .." உஷ்ணமான மெல்லிய தோலிலிருந்து காதல்   ஒரு தூதுவன் போல இறங்கி வரும் என்று   ஏமாற்றப்பட்டவளின் எளிய மனசாட்சியென நான்  திரும்பவும்  இன்னொருமுறை சுவரில் மோதுகிறது . பின் முத்தம் கிடைக்கிறது   அந்த இரவு என்னைப் பெண் என்று பெரிய எழுத்துக்களால் எழுதி   உரத்து வாசித்தவண்ணம் கழிந்து போனது